ஒரு முறை நான் பணியாற்றிய நிறுவனத்தின் துணைத்தலைவர் எங்கள் குழுவினருக்கு மதிய விருந்து தருவதாக திடீரென்று அறிவித்தார். நேரம் அப்போதே 2 மணிக்கு மேல் ஆகியிருந்தது. சரியென்று புறப்பட்டோம். கிரீம்ஸ்ரோடில் இப்போது சங்கீத இருக்கும் இடத்தில் அப்போது தமாஷா என்று ஒரு உணவகம் இருந்தது..அனேகமாக கழுவிக் கவிழ்த்து வைக்கும் நேரம் போல அப்போது. புதிதாக ஒரு சர்வர் எங்கள் மேசைக்கு வந்தார். என்ன இருக்கிறது என்று கேட்டார். உணவுப்டபட்டியலை நீட்டினார். ஒவ்வொருவரு ஒவ்வொன்றாகக் கேட்க ஆரம்பித்தோம் எதற்குமே இல்லை...இல்லை என்றே பதில் வந்தது. கொஞ்சம் நேரம் கவனித்துக் கொண்டிருந்த துணைத் தலைவர், "தம்பி, இங்கே வா" என்றார். சர்வரும் அருகில் பவ்யமாக போய் நின்றார். தம்பி "பூட்டிருக்கா?" என்று பரிவாகக் கேட்டார். குழம்பியபடியே "ஓ இருக்கு சார்!" என்றார் அந்த அப்பாவி சர்வர். "அப்ப எடுத்துப் பூட்டு?" என்றாரே பாக்கலாம். சர்வர் பதறிப்போய் "சார் எதுக்கு அப்படி சொல்றீங்க?" என்று இன்னமும் அப்பவியாகக் கேட்டார். இவர் சூடாகிவிட்டார். தம்பி உனக்குப் புரியாம கேக்குறியா.... இல்லை புரிஞ்சு என்னை கமெடியாக்க முயற்சிப் பண்றியா?" என்று கேட்டார். இன்னமும் அப்பாவித் தனமாக புரியவில்லை என்பது போலவே முகபாவத்தை வைத்திருந்தார் அந்த சர்வர். அதற்குள் மேலாளர் வந்து இடையில் புகுந்த " என்ன வேண்டுமோ கேளுங்கள், 10 நிமிடத்தில் தயார் செய்கிறோம்" என்று சொன்னார். பசி நேரத்தில் அவ்வப்போது இது நினைவுக்கு வரும்....
No comments:
Post a Comment