Friday, July 18, 2014

திறன்

நமக்கு இயற்கையை உருவாக்கும் திறன் கிடையாது, ஆனால் அதைப் பாதுகாக்கும் திறன் உண்டு. நமது திறனை மேம்படுத்திக்கொள்வோம். நம் அன்னை பூமியைப் பாதுகாப்போம்!

Thursday, July 17, 2014

சுபதினம்

அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுதும் சுபதினம்.

Sunday, July 6, 2014

நகர்கள்

கிராமங்களில் இருந்து வேறொரு புதிய இடத்திற்கு நகர்ந்த போது அந்த இடம் நகரம் என்று அழைக்கப்பட்டது, ஆனால் இப்போதெல்லாம் கிராமத்துக்குள்ளேயே பல "நகர்கள்" இருக்கின்றன.

இரண்டு முகம்!

இப்பத் தான் ஜங்க் ஃபுட் பத்தி ஒரு கட்டுரைப் படிச்சு முடிச்சேன். இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிற இந்த நொறுக்குத் தீனிகளின் உற்பத்தியை தடை செய்ய வேண்டியது நமது அரசாங்கத்தின் கடமை தானே. ஒரு பக்கம் அவற்றை தயாரிக்க அனுமதியைக் கொடுத்துவிட்டு, மற்றொரு புறம் அதை சாப்பிடாதீர்கள் என்று சொல்வது..."பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது" போலத் தான் இருக்கிறது.

Saturday, July 5, 2014

உணர்வு

தனித்துவிடப்பட்டது போன்ற ஒரு வெறுமை... !

ஆடித்தள்ளுபடி

போன வருஷம் ஆடித் தள்ளுபடிக்கு போத்தீஸ் போயிருந்தேன். அப்போ ஒரு டிரவுஸர் (பேன்ட்) எடுக்கறதுக்காக பாத்துக்கிட்டு இருந்தேன். பக்கத்துல ரெண்டு சேல்ஸ்மேன்கள் பேசிக்கொண்டார்கள்...எலே...நீ ரேட்டு ஏத்திப் போட்டியாலே... நான் எத்திப் போட்டுட்டேன்... கஸ்டமர் இருக்க எடத்துல என்னலே  இந்த பேச்சு...போலே அங்கிட்டு... இது தான் இவங்களோடு ஆடித் தள்ளுபடி இரகசியம் போல....!

வானிலை

வானிலையே சரியில்லை... ஏதோ விபரீதம் இயற்கைல நடக்கப் போகுதுன்னு இப்பத் தான் நெனைச்சுக்கிட்டு வந்து உட்காருகிறேன்... ஜப்பானில் 5.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம்!!

நகைச்சுவை அனுபவம்

ஒரு முறை நான் பணியாற்றிய நிறுவனத்தின் துணைத்தலைவர் எங்கள் குழுவினருக்கு மதிய விருந்து தருவதாக திடீரென்று அறிவித்தார். நேரம் அப்போதே 2 மணிக்கு மேல் ஆகியிருந்தது. சரியென்று புறப்பட்டோம். கிரீம்ஸ்ரோடில் இப்போது சங்கீத இருக்கும் இடத்தில் அப்போது தமாஷா என்று ஒரு உணவகம் இருந்தது..அனேகமாக கழுவிக் கவிழ்த்து வைக்கும் நேரம் போல அப்போது. புதிதாக ஒரு சர்வர் எங்கள் மேசைக்கு வந்தார். என்ன இருக்கிறது என்று கேட்டார். உணவுப்டபட்டியலை நீட்டினார். ஒவ்வொருவரு ஒவ்வொன்றாகக் கேட்க ஆரம்பித்தோம் எதற்குமே இல்லை...இல்லை என்றே பதில் வந்தது. கொஞ்சம் நேரம் கவனித்துக் கொண்டிருந்த துணைத் தலைவர், "தம்பி, இங்கே வா" என்றார். சர்வரும் அருகில் பவ்யமாக போய் நின்றார். தம்பி "பூட்டிருக்கா?" என்று பரிவாகக் கேட்டார். குழம்பியபடியே "ஓ இருக்கு சார்!" என்றார் அந்த அப்பாவி சர்வர். "அப்ப எடுத்துப் பூட்டு?" என்றாரே பாக்கலாம். சர்வர் பதறிப்போய் "சார் எதுக்கு அப்படி சொல்றீங்க?" என்று இன்னமும் அப்பவியாகக் கேட்டார். இவர் சூடாகிவிட்டார். தம்பி உனக்குப் புரியாம கேக்குறியா.... இல்லை புரிஞ்சு என்னை கமெடியாக்க முயற்சிப் பண்றியா?" என்று கேட்டார். இன்னமும் அப்பாவித் தனமாக புரியவில்லை என்பது போலவே முகபாவத்தை வைத்திருந்தார் அந்த சர்வர். அதற்குள் மேலாளர் வந்து இடையில் புகுந்த " என்ன வேண்டுமோ கேளுங்கள், 10 நிமிடத்தில் தயார் செய்கிறோம்" என்று சொன்னார். பசி நேரத்தில் அவ்வப்போது இது நினைவுக்கு வரும்....

ஓய்வில்லை

அஸ்தமன நேரத்திலும் காலை வணக்கப் பதிவுகளுக்கு ஒய்வு இல்லை....

உச்சக்கட்டம்

தேடமாட்டார்கள் என்றுத் தெரிந்தும் தேடவேண்டும் என்ற எதிர்பார்ப்பை வைப்பது தான் முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்.

Friday, July 4, 2014

ஜென் நிலை

எத்தனை தான் பின்னாடி வர்றவன் ஹாரன் அடிச்சாலும், எதையும் கண்டுக்காம வண்டி ஓட்டுறதும் ஜென் நிலை தான்

அழகு!

எனது அண்ணன் மகனை கோட் மற்றும் ரோப் வாங்க பாரிஸ் கார்னர் அழைத்துச் சென்றிருந்தேன். கோட்டையும் ரோபையும் போட்டு கண்ணாடியில் அழகுப் பார்த்த போது...உங்கப்பா தானே இதை முதலில் பார்த்திருக்கணும்...எம்புட்டு சந்தோஷப்பட்டிருப்பான்...கண்கள் கலங்கிவிட்டன.

நெஞ்சழுத்தம்!

உலக கோப்பைல ஃபுட்பால் ஆடுறவனே திண்டாடுறான். அனுஷ்கா அனுன்னு ஒரு புள்ள என்ன ஃபேஸ்புக்ல ஃபுட் பால் ஆடக் கூப்பிடுது!!! எம்புட்டு நெஞ்சழுத்தம்!!

நம்பிக்கை

துன்பங்கள் எத்தனைக் கடந்து வந்த போதிலும் இறைவன் கைவிட மாட்டான் என்கிற நம்பிக்கையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

மருத்துவர்கள்!!

வருஷத்துக்கு 5-6 லட்சம் செலவு செஞ்சுட்டு 5 வருஷம் படிச்சுட்டு வர்ற மருத்துவர்களை நாம கிராமங்களிலும், நாட்டின் தொலை தூரங்களிலும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பது நமது முட்டாள் தனம். அவங்களோட ஹாஸ்டல் ஃபீஸே வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய். இத்தனை ரூபாய கொட்டிக் கொடுத்து படிக்க வைச்ச எந்த அப்பனாத்தாளுக்குத் தான் தன்னோட மகனோ மகளோ குக்கிராமத்துல வேலை பாக்கணும்னு யோசிக்கத் தோணும்.... ?!

சபிக்கப்பட்டவர்கள்!

பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை போன்ற சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் சபிக்கப்பட்டவர்கள் பாவம்!!!

காமம்!

காமம் மட்டும் தான் முக்கியம் என்றால் காட்டு விலங்குகளோடு விலங்குகளாக இருக்கலாம்..... சமூகம் தேவையில்லை

கேண்டி கிரஷ்..!

Naresh Chander நான் இங்கே கேண்டி கிரஷ் விளையாட வரலை...ப்ளிஸ்!!!

சாப்பாடு...!

இருக்கறது ஒரு புள்ளையாம் ஆனா அவனுக்காக சென்னைல ஒரு வீடு, கோயம்புத்தூர்ல ஒரு ஃபிளாட்டு, பெங்களூரில் ஒரு அப்பார்ட்மென்ட்னு வாங்கிப் போட்டுகிட்டே இருக்காங்க...ஒருத்தன் எத்தனை வீட்லயா குடியிருக்கப் போறான்... இதுக்கு ஒரு பத்து ஏக்கர்ல விவசாயம் பண்ணா நாளைக்கு அவனும் அவன் புள்ளைக் குட்டிகளும் சந்தோஷமாக இருக்கும்ல... சாப்பாட்டு கஷ்டப்படாம?!

பொறுப்பு!

இருந்தத் தென்னந்தோப்புகளையெல்லாம் அழிச்சு ஃபிளாட் போட்டு வித்தாச்சு...இதுல தேங்காய் ரூ. 25/-க்கு விக்குதுன்னா என்ன பண்ண முடியும். ஃபிளாட்டா வாங்கிப் போடணும்னு ஆசைப்பட்டவங்களும், பொன் முட்டையி வாத்தை ஒரேயடியா அறுத்து எறிஞ்ச தென்னந்தோப்பு உரிமையாளர்களும் தான் இதற்குப் பொறுப்பு.

கூப்பாடு...!

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதிகளின் அபாயம் இருப்பது தெரிந்து அங்கு பணத்திற்காக சென்று வேலைக்கு சேர்ந்து விட்டு, பிரச்சனைன்னு வரும் போது, இந்திய அரசாங்க எங்களுக்கு உதவல... எங்களைக் காப்பாத்துல ஏன் கூப்பாடு போடுறீங்க... இந்திய அரசாங்கமா உங்களை அங்கே போய் வேலைப் பாக்க சொன்னது?!

காதுல பூ!!

எல்லா சீரியலும் காதுல கூடக் கணக்குல பூ சுத்துறானுங்க...ஆனா அதையும் ஒரு கூட்டம் கண் கொட்டாம பாக்குது.... கல்லத் திருத்துனாலும் உங்களைத் திருத்த முடியாது!

பாட்டனோட அப்பன பேரு...!

எங்க பாட்டனோட அப்பா ‍பேரே எனக்குத் தெரியாது....இதுக்கே நான் இதுவரைக்கும் வெக்கப்பட்டதில்லை.... மரியாவுக்கு சச்சின் பேரு தெரிஞ்சா என்ன..தெரியாட்டி என்ன.... கிர்ர்ர்ர்ர்ர்

ஹீரோஸ்

இந்த இன்ஸ்பெக்டர்கள் ரெண்டு பேரையும் வைச்சு ஒரு படம் எடுத்தா என்ன.... — with Ambed Kar and Moorthy Perumal.

போங்கையா அங்கிட்டு!

நம்ம் ஊர்ல இருக்க பலருக்கு காமராஜர் யாரு, திருப்பூர் குமரன் யாருன்னே தெரியலை...இதுல மரியா ஷெரபாவோவைப் பத்தி பேச வந்துட்டீங்க.... போங்கையா அங்கிட்டு!

இயலாமை!!

மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்று ஒப்புக் கொண்டு பிப்ரவரியிலேயே தேதி வாங்கிய பிறகு இப்போது அதற்கான வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்பதை மேலிடத்தில் தெரிவிப்பதை கனத்த இதயத்துடன் செய்ய வேண்டியதாகவிட்டது. — feeling sad.

தீக்குளித்தல்

ஒரு நாள் தீக்குளிப்பவனுக்கு
தெரிவதில்லை..
இங்கே பலர் ஒவ்வொரு நாளும்
வார்த்தை தீக்குளித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்று!

வாழ்க்கை...!

எது நடக்கணுமோ அது கண்டிப்பாக நடக்கும். எது நடக்கக் கூடாதோ என்ன செஞ்சாலும் அது நடக்காது. எது எப்போ எப்படி எங்கே நடக்கணுங்கிறது மேலே இருக்கிறவன் தான் தீர்மானிக்கிறான்......இது தான் வா....ழ்...க்....கே.... — with Rajsiva Sundar.