Monday, August 18, 2014

ஆண்டவன்

இன்னும் ஒரு தோசைப் போடட்டுமா என்னும் போது அம்மாவின் வார்த்தையில் ஆண்டவனை பார்க்கலாம்!

Sunday, August 17, 2014

மதமாற்றம்

வற்புறுத்தி மதம் மாற்றும் போது ஒரு மதம் அதன் தனித்தன்மையை இழந்துவிடுகிறது. இது என் தனிப்பட்டக் கருத்து!

ஆன்ம உணர்வு

இறைவனே இன்னும் பூரணத்துவம் பெறவில்லை என்கிறது ஒரு இறையியல் தத்துவம். மனிதன் தனது நிலையிலிருந்து மேம்படுவதற்கு முயற்சிக்கிறான். சாதாரண மனிதன் உடலால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். ஞான மார்க்கத்தைப் பின்பற்றுபவன் ஆன்மாவால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான், இருப்பினும், அவனுக்கு தனது கர்மவினைகளைப் பொறுத்து உடலால் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது இயற்கை நியதி.

திரைப்படம்

பாட்சா ரஜினியோ... அஞ்சான் சூர்யாவோ படத்தின் வெற்றித் தோல்வியால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை, இழப்புத் தயாரிப்பாளருக்கும் வினியோகஸ்தருக்கும் தான். அதோடு திரைப்படங்களை பொழுது போக்காக பார்த்தோமானால் நமக்கும் நல்லது. திரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை என்றைக்கு கைவிடப் போகிறோமோ தெரியவில்லை...

மேம்பாலம்

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் உள்ளே செல்வதற்குத் தனியாக ஒரு மேம்பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும். அதனால் போக்குவரத்து நெரிசல் நேரங்களில் குறிப்பாக திங்கள், வெள்ளி, மற்றும் பண்டிகை நாட்களில் போக்குவரத்து தடைபடுவது குறையும்.

செயல்

மனசுல பட்டதை எழுதுறோம்...மனசுக்கு புடிச்சிருந்தா பேசுறோம்... பணம் காசு போக்குவரத்து இல்லாம, அவங்க அவங்க வேலையைப் பார்த்தாலே போதும்...என்ன நான் சொல்றது?!!

ஆங்கிலம்

தங்கள் பிள்ளை வெளி உலகில் செல்லும் போது ஆங்கிலப் புலமையினால் திண்டாடக்கூடாது என்று நினைக்கும் ஆங்கிலப் புலமையுள்ளப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். சிலர் நாம் தான் அவ்வளவாக ஆங்கிலப் புலமைப் பெறவில்லை நம் குழந்தையாவது ஆங்கிலத்தில் புலமையோடு இருக்க வேண்டுமே என்பதற்காக ஆங்கித்தில் பேச முயற்சிக்கிறார்கள். இது எல்லாம் சரி தான். ஆனால் வெறும் டாடியையும், மம்மியையும் மட்டும் ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுப்பவர்களை ஏற்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்தில் புலமை இருப்பவர்கள் கூட தன் குழந்தை அம்மா, அப்பா என்று அழைப்பதையே பெரிதும் விருமபுகிறார்கள். டாடீஸ், மம்மீஸ் கதை தான் வேறு!

Saturday, August 16, 2014

மதுராஷ்டகம்

மதுராஷ்டகம் : 1
==============
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

உன் உதடுகள் இனிமையானவை உன் மேனி இனிமையானது உன் கண்கள் இனிமையானவை உன் புன்னகை இனிமையானது உன் இதயம் இனிமையானது உன் நடையும் இனிமையானது உன்னைப் பற்றிய அனைத்துமே இனிமையானவை இனிமைகளுக்கெல்லாம் தலைவா!

மதுராஷ்டகம் : 2
================
வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் பிரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

உன் மொழியும் இனிமை உன் பண்பும் இனிமை உன் உடையும் இனிமை பாணியும் இனிமை உன் நடையும் இனிமை நீ சுற்றி வருவதும் இனிமை இனிமைகளின் தலைவா!

மதுராஷ்டகம் : 3
================
வேணுர் மதுரோ ரேணுர் மதுரஹ பாணிர் மதுரஹ பாதெள மதுரஹ ந்ருத்யம் மதுரம் ஷாக்யம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

‍அவன் குழலூதுவதும் இனிமையானது, அவன் காலடித் தூசும் இனிமையானது அவன் கைகள் இனிமையானது பாதங்களும் இனிமையானது அவன் ஆடும் நடனம் இனிமையானது அவனுடைய நட்பு இனிமையானது இனிமைகளுக்கெல்லாம் தலைவனைப் பற்றிய அனைத்தும் இனிமையானது.


மதுராஷ்கடம் 4
===============
கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் சுக்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

அவன் பாடல் இனிமையானது அவன் பருகுவதும் இனிமையானது அவன் தூங்குவதும் இனிமையானது அவன் வடிவமும் இனிமையானது அவன் அணிந்திருக்கும் திலகமும் இனிமையானது இனிமைக்கெல்லாம் தலைவனைப் பற்றிய அனைத்தும் இனிமையானது

மதுராஷ்டகம் 5
===============
கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ரமணம் மதுரம் வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்.

அவன் செயல்கள் இனிமையானவை அவன் விடுவிப்பதும் இனிமையானது அவன் கொள்ளைக் கொள்வதும் இனிமையானது அவன் காதல் விளையாட்டுகளும் இனிமையானது அவன் அளிக்கும் தானமும் இனிமையானது அவன் முகபாவமும் இனிமையானது இனிமைகளின் தலைவனைப் பற்றிய அனைத்துமே இனிமையானது

மதுராஷ்டகம் 6
===============
குன்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

அவன் அணிந்திருக்கும் ஆபரணம் இனிமையானது அவனணிந்திருக்கும் மலர் மாலை இனிமையானது அவனின் சந்திப்பும் இனிமையானது அவனது மீட்பும் இனிமையானது இனிமையின் தலைவனின் அனைத்தும் இனிமையானது

மதுராஷ்கடம் 7
===============
கோபி மதுரா லிலா மதுரா
யுக்தம் மதுரம் முக்தம் மதுரம் த்ரிஷ்டம் மதுரம் ஷிஷ்டம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

அவன் கோபிகைளும் இனிமையானவர்கள, அவனது லீலைகளும் இனிமையானது, அவனை சந்திப்பது இனிமையானது, அவனிடமிருந்து மீள்வதும் இனிமையானது அவனது கண்ணோட்டமும் இனிமையானது அவனது ஆசாரமும் இனிமையானது இனிமைகளுக்கெல்லாம் தலைவனைப் பற்றிய அனைத்தும் இனிமையானது.

மதுராஷ்டகம் 8
===============
கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஷ்ரிஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

அவனது மாடு மேய்க்கும் நண்பர்களும் இனிமையானவர்கள் அவனது பசுக்களும் இனிமையானவை அவன் மேய்ப்புத் தடியும் இனிமையானது அவனது படைப்பும் இனிமையானது அவனது வெற்றியும் இனிமையானது அவனது பலன்களும் இனிமையானவை இனிமைகளின் தலைவனைப் பற்றிய அனைத்தும் இனிமையானவை.

Friday, August 15, 2014

நூல்

நூல் கொடுத்து
நூல் அறுத்தான்
நூல் உதித்த
நூல்!

சொல்லுக

சொல்லுகவெனச்சொல்லி
சொல்லறச் செய்து
சொல்லாக்கித் தந்தான்
சொல்லுக்கு அடியான்!

ஈசன்

எந்தை ஈசன்
எனை ஈசனாக்கி
தன்னை ஈசனில்
தான் வைத்தானே!

உரு

உருவற்றதாகி உருவெடுத்து
உருவை உருவேற்றி
உருவால் உருமாறி
உருவினால் உருவற்றுப் போவதே
உரு!

நான்

நானிழந்து
நானடைந்து
நானுணர்ந்து
நானாகி நிற்பதே
நான்!

அகம்

அகம் அழிய
அகம் தோன்றும்
அகமே அகமாகி
அகத்தை காக்கும்!

சுடுதல்

சுடுவதில் சுட்டால்
சுடுவதைச் சுடும்
சுடுவது சுட்டதாகிவிடும்!

பற்று

பற்றினவற்றைப் பற்றினாலும்
பற்றினவை பற்றாது
பற்றாதவை பற்றும்
பற்றற நிற்பதே பற்று!

யாதும்

யாதுமாகி யாதுமற்று
யாதிலும் யாதாக
யாதானேன்!